நாவலில் ஒற்றுமை, வெற்றி பெறுதல், எதிரியைக் கண்டு அஞ்சாது எதிர்த்து நின்றல் முதலான தமிழர்களின் உணர்வு மிகச் சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இந்நாவலில் தமிழர்களின் தலைச்சிறந்த தலைவனாகத் திகழ்பவன் பொத்தகுட்டன் என்பவனாவான். இவன் தமிழர்களிடம் ஒற்றுமை உணர்வு மிக அவசியம் என்னும் கருத்தினை தமிழ் மக்களிடம் எடுத்துக் கூறுவதை நாவலில் காணமுடிகிறது. இதனை, 'அதைத் தானே இன்னும் செய்து கொண்டிருக்கிறோம் நீங்களெல்லாம் வேற்றுமையை மறந்துவிட்டீர்கள் என்பது உண்மையானால் இதோ முன்னாலே அமர்ந்திருக்கும் ஐவர் தலைக்கிரீடங்களை அணிந்திருக்கிறார்களே அது ஏன்? அவர்களுக்குத் தாங்கள் தலைவர்கள் என்ற நினைப்பு இருக்கிறது என்று தானே பொருள்? ஐந்து பேரைத் தவிர மற்றவர்கள் தலைவர்கள் அல்ல என்பது தானே அர்த்தம்? இதுதான் ஒற்றுமையா? இனத்தால், பழக்கவழக்கங்களால் மாறுபட்டுக் கிடந்தாலும் மொழியாய் நாம் ஒன்றுபட வேண்டும். நாம் தமிழர் என்ற உணர்வு மட்டுமே நம்மிடம் இருத்தல் வேண்டும்' (உதயணன், மானவர்மன், பக்.3-4) என்று தன்னுடைய தமிழ் வீரர்களிடம் கூறுவதைக் காணும்போது ஒற்றுமையுணர்வு கொண்டவர்களாகத் தமிழன் திகழவேண்டும் என்னும் மேலான உணர்வை பொத்தகுட்டன் தன் வீரர்களுக்கு அறிவுறுத்துவதைக் கதையில் காண்கிறோம்.
மானவர்மன் (வரலாற்று நாவல்) - Manavarman Varalatru Novel
- Brand: உதயணன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹350
Tags: manavarman, varalatru, novel, மானவர்மன், (வரலாற்று, நாவல்), , -, Manavarman, Varalatru, Novel, உதயணன், சீதை, பதிப்பகம்