மாண்புமிகு விவசாயிகள்
மரபு விவசாயத்தை மீட்டெடுத்து சமூக மாற்றத்தை உண்டாக்கிய
சாதனை விவசாயிகளின் பசுமைக் கதைகள்
உழவுத் தொழில் நொடிந்த நிலையில், ஒரு பிரதேசமே கைவிடப்பட்ட
சூழலில், செயற்கையான உரங்களாலும், பூச்சிக் கொல்லிகளாலும்
மண்ணே மலடான தருணத்தில் ஒரு மீட்பர் போல. ஒரு தேவதை
போலத் தோன்றி, அந்தப் பிரதேசத்துக்கே புத்துயிர் கொடுத்த
உழவர்களின் அசாதாரணக் கதைகளே இந்தப் புத்தகம்.
இந்த மண் மீதும், மனிதர்கள் மீதும் காண்ட அக்கறையினால்
இயற்கை விவசாயத்தை நம்பிக் களமிறங்கி, அவமானங்களைப்
புறக்கணித்து, தோல்விகளை விழுங்கி நிமிர்ந்து, நின்று போராடி,
பசுமையை மீட்டெடுத்து வென்ற எளிய, வலிய மனிதர்கள்தாம் இவர்கள். தாம் இயங்கும் சமூகத்தையும் இயற்கை விவசாயத்தின்
வழியில் கைதூக்கிவிட்ட வயக்காட்டுப் போராளிகள். நம் மண்ணில்
மட்டுமல்ல தேசங்கள் தோறும், கண்டங்கள் தோறும்
அர்ப்பணிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு இயற்கை
விவசாயிகளை இங்கே சந்திக்கலாம்.
'இயற்கையோடு இணைந்த இவர்களது வெற்றி, பசுமையான
எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இன்னும் மிச்சம் வைக்கிறது.
நாளைக்கு நம் சந்ததிக்கும் நல்ல, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என்ற ஆசையைத் தக்க வைக்கிறது. மாற்றம், நம் மனதில்
இருந்துதான் உண்டாக வேண்டும் என்ற பேருண்மையை
உரக்கச் சொல்கிறது.
இந்த மாண்புமிகு விவசாயிகள் நம் மனத்தில்
உண்டாக்கப் போகும் மாற்றம் மகத்தானது!
எனவ வ.
| ॥ ॥
7881941782
Tags: manbumigu, vivasayigal, மான்புமிகு, விவசாயிகள், முகில், வானவில், புத்தகாலயம்