பாலாறு, பொன்னை ஆறு, அடையாறு, கூவம் ஆறு ஆகியவை பாயும் கரைவெளி மண்ணில் வாழும் எளிய மாந்தர்களின் சுயவாழ்வில் ஆழப் புதைந்த தீராரணங்களையும், வலிகளையும் மௌன சாட்சியாகப் பதிவு செய்யும் சிறுகதைகள் பொன்.விமலாவுடையது. முன் தீர்மானங்களின்றியும் இறுதிப் புதிர் அவிழ்பின்றியும் புனைவுவெளியில் வாசகனை வழிநடத்திச் சென்று ஆழ்ந்த மனவிரிவுக்கு உட்படுத்த முயல்கிறார். பூ தொடுப்பதுபோல ஜோடனை இல்லாமல் சொற்களை கோர்த்து கதை பின்னும் லாவக மொழிநடை வசீகரிக்கிறது.
- என்.ஸ்ரீராம்
பெண் எனும் தன்னிலையின் இருப்பு பதிவு செய்யும் கிராம மற்றும் நகரப் பின்னணியிலான கதைகளாக இவை இருக்கின்றன. மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கலான வாழ்வியல் தருணங்களை அப்போது மானுட உறவுகளில் உருவாகும் விரிசல்களை, விலகல்களைப் பேசும் கதைகளாகவும் இருக்கின்றன. வாழ்வியல் சிக்கல்களின்போது மனித மனதில் உருவாகும் தத்தளிப்பு, ஆவேசம், கோபம், வன்மம், பெருந்தன்மை, தியாகம் போன்ற குணரூப விநோதங்களை நுட்பமாகப் பதிவு செய்கின்றன. விமலாவுக்கு ஆற்றொழுங்காய் கதை சொல்ல வருகிறது. காட்சிகளின் விவரணைகளில் இருக்கும் கலை நுணுக்கம் கதையோட்டத்தில் இருக்கும் தெளிவு, பூடகமற்ற எதார்த்தமான மொழியழகு வாசக மனதுக்கு நெருக்கமான கதை அனுபவத்தைத் தருகின்றன.
- இளங்கோ கிருஷ்ணன்
Tags: maramalli, மரமல்லி, -, Maramalli, பொன்.விமலா, டிஸ்கவரி, புக், பேலஸ்