• மரணத்துக்குப்பின்
மனித குலத்தைக் காலம் காலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகக் கொடுமையான பகைவன் யார்? இந்தக் கேள்விக்கு மிக எளிமையானதும் பொருத்தமானதுமான ஒரே பதில்தான் உண்டு. அது, மரணம். கடவுளின் அவதாரங்களான ராமரும் கிருஷ்ணரும் இறுதியில் உலக வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களே. மதக் கோட்பாடுகளை உலகுக்கு அளித்த ஆதிசங்கரரும் புத்தரும் மகாவீரரும் ஒருநாள் உலகைவிட்டு மறைந்துதான் போனார்கள். அற்புதங்கள் பலவற்றைச் செய்து காட்டிய ஆழ்வார்கள், நாயன்மார்களுக்கும் இறப்பு என்ற ஒன்று இருக்கத்தான் செய்தது. ஒருவனுக்கு மரணம் என்பது எப்படி நேர்கிறது? அவனது உயிர் எந்த வழியாக அவன் உடலிலிருந்து பிரிந்து செல்கிறது? இது பற்றிய உண்மை தெரிந்தால்போதும். மரணம் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக நம்மால் அலசி ஆராய்ந்து நம் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய பல உண்மைகளை நம்மால் சுலபமாகக் கண்டறிந்து விடமுடியம். அதன் மூலம் மரணத்தைத் தடுக்கும் வழிமுறைகளையும் நாம் கண்டுபிடித்துவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. ஆயினும், மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பல நோயாளிகளிடம் தீவிரமான பல ஆய்வுகளை மேற்கொண்டும்கூட எப்படி ஒரு மனிதனுக்கு மரணம் நேர்கிறது என்பது பற்றி யாராலும் கண்டறிய முடியவில்லை. மரணத்துக்கு முன்னர் மனிதனுக்கு என்ன நிகழ்கிறது? மரணத்துக்குப்பின் மனிதனின் நிலை என்ன? இவை குறித்தெல்லாம் விஞ்ஞானமும் உலக மதங்களும் என்னதான் சொல்கின்றன? இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் என்ன?, ஆன்மீக நூல்கள் இதுபற்றி என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி எளிதில் புரியும் வகையில் விவரிக்கிறது இந்தப் புத்தகம்!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மரணத்துக்குப்பின்

  • ₹399


Tags: maranaththukkuppin, மரணத்துக்குப்பின், குருஜி வாசுதேவ், Sixthsense, Publications