• மறதி நோய் சுகமா? சுமையா?
உயிர்களின் படைப்பிலே அற்புதப் படைப்பாக அமைந்தது மானுடப் பிறவி. வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத பகுத்தறியும் திறன், மனித இனத்துக்கு மட்டும் ஒரு சிறப்பு! அதிலும், எண்ணிலடங்கா நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பதிவாக்கி வைத்து, தேவையான வேளைகளில் பயன்படும் நினைவாற்றலைக் கொண்ட மனிதனின் மூளை பிரமிப்புக்குரியதே! மறதி ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியதுதான். அந்த மறதியினால் ஒரு சில வேளைகளில் நன்மையும், ஒரு சில வேளைகளில் தீமையும் விளைவதுண்டு. இந்த அனுபவம் நிச்சயம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். மறதி எப்படி ஏற்படுகிறது? மறதி என்பது மறதி நோயாக ஆகிவிடுவது எப்படி? யார் யாருக்கெல்லாம் மறதி நோய் ஏற்படக்கூடும்? வரும் முன் காப்பது எப்படி? வந்த பின் குறைப்பது எப்படி? &இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகளுக்கு இந்த நூல் விடையளிக்கிறது. மறதி, சுகமாகவும் சுமையாகவும் அமைவதை, அறிவியல்பூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் டாக்டர் வி.எஸ்.நடராசன். மறதி நோயின் தன்மை, பாதிப்புகளைக் கண்டறியும் விதம், சிகிச்சை முறைகள், நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களுக்கான ஆலோசனைகள்... இப்படி, பல உபயோகமான தகவல்களை இந்த நூலில் கொடுத்துள்ளார். ‘குருத்து ஓலை ஒரு நாள் பழுத்த ஓலை ஆகும்’ என்பதாலும், ‘நினைவாற்றல் குறைந்த முதியோர் அனைத்து இல்லங்களிலும் இருக்கின்றனர்’ என்பதாலும் இந்த நூலை அனைவருமே படித்துப் பயன் பெற முடியும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளால் நினைவாற்றலைப் பெருக்கி வயோதிக காலத்தையும் வசந்தமாக்குவோம்!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மறதி நோய் சுகமா? சுமையா?

  • ₹70
  • ₹60


Tags: marathi, noi, sugama, sumaiya, மறதி, நோய், சுகமா?, சுமையா?, வி.எஸ். நடராசன், விகடன், பிரசுரம்