நிலம் என்பது பெரும் ஆவல், ஓயாமல் மாறி விழுந்து கொண்டே இருக்கும் சமுதாய, பொருளாதாரப் பேரலைப் பின்னல்களின் நடுவே நிலம் என்பது நங்கூரத்தின் பெரும்பிணைப்பு, நிலம் என்பது கடைசிப் பற்றுக்கோடு. சிங்கப்பூர் என்பது ஒற்றைக் குணம் கொண்ட நிலம் என்று பலரும் நினைக்கிறார்கள், சிறு தீவுதான், ஆனால் இந்தத் தீவுக்குள் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் வட்டாரத்துக்கும் தனிப்பட்ட வரலாறும், குணமும், வாசனையும் வண்ணங்களும் இருக்கின்றன. இது சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் பகுதியைப் பற்றிய, அதில் வாழும் மனிதர்களைப் பற்றிய நாவல். புக்கிட் பாஞ்சாங்கில் வசிக்கும் முதியவரான சுகவனம் இறந்துபோன தனது மனைவி ஜெயக்கொடிக்காக கரும் காரியங்களை செய்ய ராமேஸ்வரம் போக நினைக்கிறார். ஆனால் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றுமே அறியாத 'சுகவனத்தை ராமேஸ்வரம் என்ற இடம் பயமுறுத்துகிறது. ராமேஸ்வரத்தின் அந்நியம் அவருக்குச் சவாலாய் அமைகிறது. சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் பகுதியின் வரலாறு, நிலவியல், சமூக அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய குறிப்புக்களின் ஊடாக ராமேஸ்வரம் சென்று அங் கிருக்கும் கடலில் நூற்றியெட்டு முறை தலைமுழுக விரும்பும் சிங்கப்பூர்த் தமிழர் ஒருவரின் கதையைச் சொல்கிறது, சித்துராஜ் பொன்ராஜ்-இன் 'மரயானை' நாவல்.
மரயானை-Marayaanai
- Brand: சித்துராஜ் பொன்ராஜ்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹280
Tags: marayaanai, மரயானை-Marayaanai, சித்துராஜ் பொன்ராஜ், வம்சி, பதிப்பகம்