கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல். சு.ரா.வின் புனைவுலகம் அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதைக் காட்டும் கதைகள் இவை. தீவிரமும் நுட்பமும் குன்றாமல் எளிமையான முறையில் கதைகளைச் சொல்லமுடியும் என்பதை உணர்த்தும் பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தமிழ் மண்ணை மட்டுமின்றி அமெரிக்க வாழ்வையும் தழுவியதாக விரியும் இந்தப் புனைவுவெளி, நிலம், பண்பாடு ஆகிய எல்லைகளைக் கடந்த தளத்தில் மனித வாழ்வின் கூறுகளை மிகுந்த அக்கறையுடனும் தீராத வியப்புடனும் திறந்த மனத்துடனும் ஆராய்கின்றன. கவித்துவம் ததும்பும் சு.ரா.வின் மொழிநடை இறுக்கம் தளர்ந்த தீவிரத்துடன் வாசகருடன் நட்பார்ந்த தொனியில் உரையாடுகிறது.
Mariya Thamuvukku Ezhuthiya Kaditham
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹160
Tags: Mariya Thamuvukku Ezhuthiya Kaditham, 160, காலச்சுவடு, பதிப்பகம்,