தனக்கு மிகவும் பரிச்சயமான சூழலில் மேலும் மேலும் ஓட்டைகளையும் பிளவுகளையும் அய்வாஸின் தன்னிலைக் கதைசொல்லி கண்டுபிடிக்கிறான். அதன் விளைவாக முழுமையான மற்றொரு நகரமே அவனுக்குத் திறந்து கொள்கிறது. நம்முடைய அன்றாட அலுவல்கள் நிறைந்த உலகில், நம் கண்களுக்குப் புலனாகாமலேயே இருக்கும் மற்றொருவெளி. இந்தப் புலனாகா வெளிக்கான வழிகாட்டிதான் மற்றொரு நகரம். நமக்கு மிக மிகப் பரிச்சயமானவற்றை நாம் தெளிவாகவே காண்பதில்லை என்பதை நமக்கு நினைவூட்டும் வினோத நகரம். பயன்பாடுகளும் நோக்கங்களுமாய்ப் பின்னியிருக்கும் வலையில் பொருள்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றன. இந்த வலையை நாம் விலக்கிவைக்கும் பொழுதுதான் பொருள்களைப் புதியனவாய்ப் பார்க்கும் வாய்ப்பிற்குள் நாம் விழித்தெழுகிறோம்.நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் உலகங்களுக்கெல்லாம் ப்ராக் நகரின் மற்றொரு நகரம் ஒரு குறியீடாகத் திகழ்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Matra Nakaram

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹240


Tags: Matra Nakaram, 240, காலச்சுவடு, பதிப்பகம்,