தனியொரு மனிதனின் இருத்தலியம் குறித்தான புனைவுகள் எப்போதும் சமூகத்தின் அடிப்படைச் சிக்கல்கள் வரை அனைத்தையும் விளிக்கக்கூடியது. பிழைப்புக்காக ஹைதராபாத் செல்லும் இந்தி ஆசிரியர் எதிர்கொள்ளும் புதிய நகர சூழல் மற்றும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே 'மற்றும் சிலர்'. உணர்வுகளின் பீறிடலாக மட்டுமேயன்றி சம கால அரசியலோடு கலந்த வாழ்வியலை காட்சிப்படுத்தும் நாவல்கள் காலம் தாண்டியும் உயிர்ப்புடன் இருப்பவை. அப்படியாக தெலுங்கானா பிரிவின் ஆரம்ப காலகட்டப் பிரச்னைகளையும் பிரிவினையின் அரசியலையும் விரிவாகவும் அழுத்தமாகவும் விவரித்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். ஹைதராபாத்தின் தெருக்களில் நம்மை கைகோர்த்து அழைத்துச் செல்வது போலான நேர்த்தியான மொழி நடையுடைய இந்நாவல் தமிழின் கிளாசிக் வரிசையில் இடம்பெறுகிறது. இதுவரை 12 நாவல்களை படைத்துள்ள சுப்ரபாரதிமணியனின் முதல் நாவல் இது. - விஜய் மகேந்திரன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மற்றும் சிலர் - Matrum Silar

  • ₹180


Tags: matrum, silar, மற்றும், சிலர், -, Matrum, Silar, சுப்ரபாரதிமணியன், டிஸ்கவரி, புக், பேலஸ்