மீ டூ இயக்கம் பிறந்த பிறகுதான் பொதுவெளிகளில் பாலின சீண்டல்கள் குறித்த புகார்கள் பெருமளவில் விவாதிக்கப்படுகின்றன. மீ டூ இயக்கத்தைப் பற்றி பல நல்ல தரவுகளைத் திரட்டி அதைக் கோர்வையாகத் தொகுத்து ”மீ டூ” என்ற தலைப்பில் வழக்கறிஞர் முனைவர் கே.சாந்தகுமாரி இச்சமயத்தில் நூலாகக் கொண்டுவந்துள்ளது பாராட்டத்தக்கது.
இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை சட்டம் மற்றும் நீதியுலகத்தை சேர்ந்தவர்களும் படித்துத் தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் சிறிய அலைகளாக தோன்றத் துவங்கியுள்ள மீ டூ இயக்கம் சுனாமியாக மாறிவிடாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள முடியும்.
- கே.சந்துரு
மேனாள் நீதிபதி