‘சுண்டக் காய்ச்சிய இறுகிய மொழிநடை’ என்று ஹைக்கூ கவிதைகள் குறித்து அப்துல்ரகுமான் சொன்னதைப் போல பிருந்தா சாரதி இந்தப் புத்தகத்தில் அடர்த்தியான, அதே சமயம் அழகான ஹைக்கூக்களைத் தந்திருக்கிறார். பிருந்தா சினிமாக்காரராக இருப்பதால் ஹைக்கூவின் படிம அழகுக்கு இடையே காட்சியின் வெளிச்சத்தை வரவழைத்துவிடுகிறார் எல்லா ஹைக்கூக்களிலும். படிப்பதற்கு இனிதான இந்தக் கவிதை களுக்கு ஓவியர் செந்திலின் தூரிகைக் கோடுகள் அழகூட்டுகின்றன. ‘எது கிழிசல்/ எது நாணயம்/ பிச்சைக்காரன் விரித்த துண்டு’ என்கிற கவிதை யில் வொய்டு ஆங்கிள் விரிகிறதென்றால், ‘நெரிசல் மிகுந்த சாலையில்/ஊர்வலம் போகிறது வீடு/முகவரி மாற்றம்’ என்கிற வரிகளின் மீது ஊர்வது நகரத்தின் டீசல் நாகரிகமல்லவா!
மீன்கள் உறங்கும் குளம் - Meengal Urangum Kulam
- Brand: பிருந்தா சாரதி
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹100
Tags: meengal, urangum, kulam, மீன்கள், உறங்கும், குளம், -, Meengal, Urangum, Kulam, பிருந்தா சாரதி, டிஸ்கவரி, புக், பேலஸ்