தன் கண்எதிரே குடியுரிமை குறித்த ஆவணங்களை துருப்புச்சீட்டாக வைத்துக் கொண்டு அரசதிகாரம் நிகழ்த்திய பெரும் வன்முறையின் துக்கமிகு மனிதவாதையை முகாம் எனும் நாவலாக கட்டித்தந்திருக்கிறார். அ.கரீம்..நாவலுக்குள் மைமூன்,ஷாகிரா எனும் இரண்டு பெண்களின் வாழ்க்கைக்குள் முன்னும் பின்னுமாக அலைந்து அவர்களின் பூர்வசரித்திரத்தின் கதைகளின் தொகுதியாகவும் நாவலை எழுதியிருக்கிறார்…அத்தோடு சமகாலத்தில் மதபயங்கரவாதம் அரசின் கருவியாகி சிறுபான்மையினரின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிடும் தந்திரத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார்.
- ம. மணிமாறன், முன்னுரையில்.