முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார்.இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம்முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது.தொடக்கத்தில் இத்தாலியில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் அபார-மானவை. அசாதாரணமான முறையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்திருக்கிறார். கட்டுக்கோப்பான ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வழிநடத்தியிருக்கிறார். பண்டைய ரோம சாம்ராஜ்ஜியத்தின் பெருமிதங்களை மீட்டெடுப்பார் என்று இத்தாலியர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஹிட்லருடன் இணைந்தபிறகும்கூட ஹிட்லரின் பல குணாதிசயங்கள் முசோலினியிடம் இல்லை. உலகைக் கட்டியாளவேண்டும் என்று அவர் விரும்பியதில்லை. யூதர்கள் கொல்லப்படவேண்டியவர்கள் என்று அவர் கருதியதில்லை. பல சமயங்களில் சூழ்நிலைக் கைதியாகவே இருந்திருக்கிறார்.ஆனால் இவை எதுவும் அவர் இழைத்த கொடூரமான தவறுகளைச் சரி செய்து விடாது. சந்தேகமின்றி, உலகின் மோசமான சர்வாதிகாரிகளில் அவர் முக்கியமானவர். முசோலினியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் தகுந்த வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்தி விரிவாக அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை-Musolini Oru Sarvadhigariyin Kadhai
- Brand: ஜனனி ரமேஷ்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹160
Tags: , ஜனனி ரமேஷ், முசோலினி, ஒரு, சர்வாதிகாரியின், கதை-Musolini, Oru, Sarvadhigariyin, Kadhai