இத்தாலியில்,
அரசியல் இருந்தது.
அதிகாரம் இருந்தது.
ஆட்சி இருந்தது.
ஆனால்,
எதிர்க்கட்சிகள் கிடையாது.
பத்திரிகைகள் கிடையாது.
தேர்தல்கள் கிடையாது.
ஆகவே,
அநியாயங்கள் நடந்தன.
அழிவுகள் நடந்தன.
அக்கிரமங்கள் நடந்தன.
அத்தனைக்கும் காரணம்,
ஒற்றை மனிதர்.
முசோலினி!
அதிகார வெறியும் யுத்தப் பசியும் கொண்ட ஒரு மனிதன் எத்தனை உயரத்துக்கு வளர்வான், எத்தனை ஆழத்துக்கு வீழ்வான் என்பதற்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியே முதன்மையான உதாரணம்.
பயந்துகொண்டும் வியந்துகொண்டும் வாசிக்கவேண்டிய வாழ்க்கை!
Tags: mussolini, முசோலினி, குகன், வானவில், புத்தகாலயம்