பொதுவாக என்னை பெண்ணெழுத்துக்களை நெருங்க விடாமற் செய்து விடுகிற இரண்டு பிரதான விஷயங்கள் மிகையான உணர்ச்சிகள், சூழலில் தேய்ந்து கிழிந்து போன செயற்கையான சொற்பிரயோகங்கள். இரண்டும் இந்த பதினான்கு கட்டுரைகளில் இல்லை. ஓரிடத்தில் மனசில் ஏறின பாரத்திற்கு அளவீடில்லை என்கிறார். அளவில்லை எனும் பொதுப்பதத்தை அளவீடில்லை என மாற்றிய கணத்தில் ஷைலஜா எனக்கு முக்கியமான எழுத்தாளராகப்படுகிறார். மொழிபெயர்ப்பாளராக மட்டுமே நானறிந்த ஷைலஜாவின் மொழி வல்லமை துலங்கி வந்திருக்கும் இக்கட்டுரைகள் அடுத்து அவர் எழுத வேண்டியது புனைவுகளே என்பதை பறைசாற்றுகின்றன. வாசகி, அண்ணி, அக்கா, அன்னை, ஆசிரியை, விவசாயி, பதிப்பாளர் என அவரெடுத்த பெண்ணின் பெருந்தக்க வடிவங்களில் எழுத்தாளர் என்பதும் முக்கியமானதாக அமையவேண்டுமென்பது என் ஆவல். -
Tags: muthiyamma, முத்தியம்மா-Muthiyamma, கே.வி. ஷைலஜா, வம்சி, பதிப்பகம்