• Muthlakshmi Reddy  /முத்துலட்சுமி ரெட்டி
இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கமுடியுமா, இவ்வளவு துணிச்சலோடு போராடியிருக்கமுடியுமா, இந்த அளவுக்கு நவீனமாகவும் புரட்சிகரமாகவும் ஒருவர் அப்போதே சிந்தித்துச் செயல்பட்டிருக்கமுடியுமா என்று வியக்கவும் ஏங்கவும் வைக்கிறார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. போராடிப் போராடித்தான் ஒவ்வோர் அடியையும் அவர் எடுத்து வைக்கவேண்டியிருந்தது. அந்த ஒவ்வொரு அடியும் ஒரு சமூகப் புரட்சியைக் கொண்டு வந்தது. புதுக்கோட்டை மகாராஜா ஆண்கள் பள்ளியின் முதல் மாணவி. சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் இந்தியப் பெண் அறுவை சிகிச்சை நிபுணர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் இந்திய உறுப்பினர். சென்னை மாகாண சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினர். முதல் பெண் துணை சபாநாயகர்.நகரக்குழுவின் முதல் பெண் உறுப்பினர். பெண் உரிமைப் போராட்டத்துக்கு முத்துலட்சுமி வகுத்துக் கொடுத்த பாதை உறுதியானது. வீட்டுச் சிறை தொடங்கி சமூகக் சிறை வரை அனைத்திலிருந்தும் பெண்கள் விடுபட வேண்டும் என்னும் பெருங்கனவோடு வாழ்ந்தவர். அந்தக் கனவுக்காகத் தன் வாழ்நாளைக் கரைத்துக்கொண்டவர். உடலைப் பாதிக்கும் நோயோடு போராட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கினார் என்றால் பெண்களைப்பிடித்துள்ள சமூக நோய்களை எதிர்க்க குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்தார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் போராட்ட வாழ்வையும் அவர் வாழ்ந்த காலத்தையும் விரிவாகப் படம்பிடிக்கும் எளிய நூல் இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Muthlakshmi Reddy /முத்துலட்சுமி ரெட்டி

  • ₹200


Tags: , V.R. Devika /வி.ஆர்.தேவிகா, Muthlakshmi, Reddy, , /முத்துலட்சுமி, ரெட்டி