பிச்சமூர்த்திக்கு வயது ஏற ஏற ஞானம் கூடிற்று. கலையார்வம் மிகுந்தது. மரபு சார்ந்த மயக்கங்கள் தெறித்தன. லட்சிய வானிலிருந்து அவர் நிதர்சனப் புழுதிக்கு வந்து சேர்ந்தார். அவருக்குத் தார்மீகக் கோபம் சுர்ரென்று ஏறிற்று. கடைசியாக எழுதியிருக்கும் கவிதையில், ‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்று எழுதினார். ‘மயில் இறகு போடாது / நவபாரதம் பிறக்க / தூக்கு மரம் தேவை’ என்று எழுதினார். போகிற போக்கைப் பார்த்தால் நக்சலைட்டுகளுக்கும் அவருக்குமான இடைவெளி மிகக் குறைந்துவிடும் என்று கூடத்தோன்றிற்று.சுந்தர ராமசாமிமுன்னுரையில்ஒரு தேர்ந்த விமரிசகனுக்குரிய உயர்ந்த மனோதர்மத்துடனும் தர்க்கத் தெளிவுடனும் சுந்தர ராமசாமி இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கட்டுரைகள் நெடுகிலும் அவரது கூர்மையான கிண்டல்கள் இழையோடுகின்றன. அவரது நவீன தமிழ் நடையழகு மனதைத் தொடுகிறது. ந.பி.யை இவ்வளவு துல்லியமாக யாரும் மதிப்பிட்டதில்லை என்ற உணர்வு புஸ்தகத்தைப் படித்து முடித்த பிறகு ஏற்படுகிறது.உணர்வும் அறிவும் வெகு அற்புதமாக இக்கட்டுரைகளில் லயப்பட்டிருக்கின்றன. இந்த லயத்தைச் சொற்களால் விவரிக்க முடியாது. அனுபவத்தால்தான் உணர முடியும். தன் அழகுணர்ச்சியையும் சிந்தனையையும் தூண்டிய எரிய வைக்கும் பகுதிகள் ஏராளம். விமரிசனம் என்பதே ஒரு விதமான வறட்டுத்தனம் கொண்டதுதான். இந்த வறட்டுத்தனத்தை அருகில்கூட வரவிடாமல், மிகுந்த கலை நயத்தோடு புஸ்தகத்தை எழுதியிருக்கிறார் சு.ரா.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Na Pitchamoorthiyin Kalai Marabum Manitha Neyamum

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹160


Tags: Na Pitchamoorthiyin Kalai Marabum Manitha Neyamum, 160, காலச்சுவடு, பதிப்பகம்,