‘ஜெயந்தி சங்கர் அடையாளம் தருவதற்கோ, அடையாளம் பெறு-வதற்கோ எழுதுவதில்லை. அவர் சிந்தனையைப் பகிர்ந்துகொள்ளவும், சிந்தனையைத் தூண்டவும் எழுதுகிறார்… வெகுஜனப் பத்திரிகைகள் ஆதரிக்கிற கதையம்சம், சிற்றிதழ்கள் வலியுறுத்துகிற கலைநுட்பம் இவற்றைத் தாண்டிய கதைகள் இவை…’ – மாலன்.‘ஜெயந்தியின் படைப்புகள் வாழ்க்கைப் போராட்டத்தையே மையங்கொண்டு சுழல்-கின்றன. சுடர்கின்றன. மனித உளவியலை, உளைச்சலை மிகத் திறமையாகப் படம்பிடித்துக் காட்டும் வல்லமை ஜெயந்திக்கு சர்வ சாதாரண-மாகக் கைகூடி வருகிறது… சிங்கப்பூரின் சுகம் பற்றி அவ்வூருக்குச் சுற்றுலா போய் வரும் யாரும் எழுதலாம். அதன் சோகம் பற்றி ஜெயந்தி போன்ற படைப்பாளிகளால் மட்டுமே எழுத முடியும்.’ – ஜெயபாஸ்கரன்.***ஜெயந்தி சங்கர் சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கிவரும் எழுத்தாளர். பல்வேறு மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். பல சிறுகதைத் தொகுப்புகளில் இஅμது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ‘நியாயங்கள் பொதுவானவை’ என்ற சிறுகதைத் தொகுப்பு ‘அரிமா சக்தி விருது 2006’ சிறப்புப் பரிசு, ‘மிதந்திடும் சுயபிμதிணிமகள்’ நூலுக்கு ‘நல்லி – திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருது 2009’, ‘மனப்பிரிகை’ நாவலுக்கு – அரிமா சக்தி 2008 (சிறப்பு) விருது உள்ளிட்ட பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.
நாலேகால் டாலர்-Naalekaal Dollar
- Brand: ஜெயந்தி சங்கர்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: , ஜெயந்தி சங்கர், நாலேகால், டாலர்-Naalekaal, Dollar