உலகின் இளைய ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. தனக்கெனத் தனித்துவமான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தையும், பாராளுமன்ற - நிர்வாக அமைப்பையும் அது உருவாக்கி 60 ஆண்டு கூட ஆகவில்லை. சாதி ஏற்றத்தாழ்வுகளாலும், சமயப் பகைமைகளாலும், இன ஆதிக்க உணர்வுகளாலும், கொதிப்புகள் உச்சத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லாத் தளங்களிலுமே சமத்துவத்துக்கான போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணமாய் உள்ளன. ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாக உள்ள அதிகாரப் பகிர்வு இன்னும் முறையாக நிகழவில்லை. பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்த முயற்சிகள் ஆண்களால் தந்திரமாகத் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
Tags: naali, நாலி, (old, book), , -, Naali, வாய்மைநாதன், சீதை, பதிப்பகம்