• நான் ஏன் தலித்தும் அல்ல?-Naan Yaen Dalithum Alla?
முத்துராமலிங்கத் தேவர் – இம்மானுவேல் சேகரன் குருபூஜைகளை எப்படிப் புரிந்துகொள்வது? பிராமணரல்லாதார் என்னும் வகைப்படுத்தலில் உள்ள ஆதாரப் பிரச்சினை என்ன? பெருமாள் முருகனின் மாதொருபாகன், பூமணியின் அஞ்ஞாடி ஆகியவற்றை எப்படி மதிப்பீடு செய்வது? ‘போலச்செய்தல்’, ‘திரும்பச்செய்தல்’, ‘சமஸ்கிருதமயமாக்கல்’ போன்ற கருத்தாக்கங்களை எப்படி உள்வாங்கிக்கொள்வது? தலித் இலக்கியத்தை யார் வேண்டுமானாலும் படைக்கமுடியுமா? மாட்டுக்கறியை உண்பதிலும் சமைப்பதிலும் ஏன் இத்தனை தயக்கங்கள்?அயோத்திதாசர் முதல் அம்பேத்கர் வரை; திராவிட அரசியல் முதல் சாதி அரசியல் வரை; மாட்டுக்கறி முதல் ஆணவக் கொலை வரை; மெட்ராஸ் திரைப்படம் தொடங்கி எம்.எஸ்.எஸ். பாண்டியன் வரை… படர்ந்து விரிந்து செல்லும் பத்து ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது இந்நூல். இவை அனைத்துக்கும் மையப்புள்ளியாக அமைந்திருக்கும் கேள்வி ஒன்றுதான். ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’டி. தருமராஜ் அதற்கு அளிக்கும் பதில் உலுக்கியெடுக்கக்கூடியது. ‘நீ ஏன் தலித்தும் இல்லை என்று கேட்டால் நான் இப்படித்தான் பதில் சொல்வேன்: அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது! அதே சமயம், சாதியைக் காரணம் காட்டி, நிகழ்த்தப்படும் கொடூரத்திற்கு எதிராக, நான் தலித்தாக இருப்பதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை. அந்தத் தருணங்களில் நான், பலவந்தமாய் என்னை மீண்டும் தலித் என்று சொல்லிக்கொள்கிறேன். ஆமாம், பலவந்தமாக!’இந்தப் புத்தகத்தை ஒரு கைவிளக்காகக் கொண்டு இன்றைய அரசியல், சமூக, இலக்கிய நடப்புகளைப் புரிந்துகொள்ள முயலும்போது பல புதிய வெளிச்சங்கள் நமக்குக் கிடைக்கும். டி. தருமராஜ் விவரித்துள்ள மானுடவியல், சமூகவியல் மற்றும் நாட்டுப்புறவியல் கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு இந்த உலகையும், ஏன் நம்மையுமேகூட நிதானமாக அலசிப்பார்க்கும்போது ஒரு ஜோடி புதிய கண்கள் கிடைத்ததைப்போன்ற அதிர்ச்சியும் திகைப்பும் ஒருசேர ஏற்படும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நான் ஏன் தலித்தும் அல்ல?-Naan Yaen Dalithum Alla?

  • ₹325


Tags: , டி.தருமராஜ், நான், ஏன், தலித்தும், அல்ல?-Naan, Yaen, Dalithum, Alla?