நாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் – மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும். இன்றைய தேதியில் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் மீது தாங்கமுடியாத வெறுப்பும், கோபமும் கொண்ட பிரிவினைவாத, குறுகிய நலன் கொண்ட, மதவாத, கம்யூனிஸ சக்திகள் ஊடகங்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடிவருகின்றன. மக்களுக்கு இன்று சென்று சேர்பவையெல்லாம் முழுக்க முழுக்க மிகையான, அவதூறான, பொய்யான செய்திகளே.ஆட்சி – அதிகாரம் – வரி வருமானம் – பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த ஆட்சிக்கும் பொருந்தும். எனவே நான் உங்களுக்கு நிர்வாக விவரங்கள் சார்ந்து சில உண்மைகளை எடுத்து சொல்லவும் – சித்தாந்தம் சார்ந்து கொள்கைகளை ஆதாரங்கள் கொண்டு விளக்கவுமே விரும்புகிறேன். நிச்சயம் உணர்வுகளை மலினமாகத் தூண்டி ஆதாயம் தேடவிரும்பவில்லை.இந்தப் புத்தகத்தில் பண மதிப்பு நீக்கம், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், கறுப்புப் பண விவகாரம், புல்லட் ரயில் திட்டம், ரொஹிங்கியா விவகாரம், பெட்ரோல் விலையேற்றம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு சீர்திருத்தம், இணையம் துறைமுகம், மீத்தேன் வாயு திட்டம், சாகர் மாலா திட்டம் போன்றவை தொடர்பான அவதூறுகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்துத்துவம் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள், திராவிட அரசியலின் உண்மை மதிப்பீடு இவையும் இடம்பெற்றுள்ளனமக்களும் இளைய தலைமுறையினரும் வாசிக்கும்போது நரேந்திர மோதியின் மீதும் பிஜேபி அரசின் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் படிக்கவும். இந்தப் புத்தகம் பிஜேபி மீதான அக்கறையுடன் அல்ல; உங்களின் மீதான அக்கறையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.
நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்-Naan Yen Narendra Modiyai Aadharikkiren
- Brand: மாரிதாஸ்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹250
Tags: , மாரிதாஸ், நான், ஏன், நரேந்திர, மோதியை, ஆதரிக்கிறேன்-Naan, Yen, Narendra, Modiyai, Aadharikkiren