தி. ஜானகிராமன் ‘கணையாழி’ இதழில் தொடராக எழுதி, அவரது மறைவுக்குப் பின்னர் நூல் வடிவம் பெற்ற நாவல் ‘நளபாகம்.’ அவரது நாவல்களில் மையப்பொருளை அவ்வளவு வெளிப்படையாக உணர்த்தாத நாவலும் இதுவே. இந்தப் பூடகமே நாவலை இன்றும் சுவாரசியமான வாசிப்புக்கு உரியதாக நிலைநிறுத்துகிறது. சுவீகாரப் பிள்ளைகள் வாயிலாகவே தொடரும் தனது குடும்ப பாரம்பரியத்தை ரத்த உறவு மூலம் வலுப்படுத்த ரங்கமணி மேற்கொள்ளும் அபாயகரமான செயலே நாவலின் மையம். மகன் துரை மூலம் மகப்பேறு வாய்க்காத மருமகள் பங்கஜத்துக்குத் துணையாக காமேச்வரனை அழைத்துவந்து வீட்டில் தங்கவைக்கிறாள். அம்பாள் உபாசகனான அவனது வருகைக்குப் பின் மருமகள் கருத்தரிக்கிறாள். அந்த அற்புதம் நிகழ்ந்தது காமேச்வரனின் பூஜையாலா? அவனது இருப்பு தம்பதியரிடையே கூட்டிய அன்னியோன்னியத்தாலா? இந்த மர்மத்தைத் தனக்கு ஆகிவந்த பின்புலத்தில், அறியவந்த மனிதர்களின் சாயலில் வசீகர மொழியில் சொல்கிறார் தி.ஜா. பச்சாதாபம், காமம், ஆன்மீகம் ஆகிய மூன்றின் கலவையான வண்ணத்தில் மிளிர்கிறது இந்தப் படைப்பு. Thi.Janakiraman wrote this novel as a series on the magazine ‘Kanaiyazhi’. It was published as a book posthumously. Poet Sukumaran the editor Thi.Janakiraman’s collected short stories says Thi.ja was never tired of celebrating humanity in his works. Humans are the central themes of his works, bound in their situations and filled with emotions. It’s an unique novel among his other novels. The theme is abstract and the abstractness makes it more intriguing for the reader. The novel is about an dangerous attempt by Rangamani, who is determined to continue her family heritage by a blood related scion instead of adopted children. Tricks, Prayers, Intimacy all are entwined in a story told in the enchanting writing style of Thi.Ja. The novel speaks of pity, lust and spirituality all in an intimate language.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Nalapaakam நளபாகம்

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹375


Tags: Nalapaakam நளபாகம், 375, காலச்சுவடு, பதிப்பகம்,