நமது தமிழக கிராமங்களில் வாழும் மக்களை பார்த்தோமானால், சுமார் 80 முதல் 90
வயதுள்ள முதியோர்கள் முதுமையின் காரணமாக தளர்ந்து, ஆனால் நோயின்றி
ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் என்னவென்று சிந்தித்துப்
பார்த்தோமானால், அவர்களுடைய உணவுப் பழக்கங்கள் மற்றும் உழைப்புதான்
முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.
அவரவர்கள் தங்கள் ஊரில் கிடைக்கும்
காய்கறிகள், தானிய வகைகளைக் கொண்டு ருசியாகவும், பாரம்பரியமிக்க சமையல்
வகைகளை கலப்படமில்லாமல் செய்து, சாப்பிடுகிறார்கள். வேர்கடலை, எள்
போன்றவற்றை பயிரிட்டு வேர்கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய எண்ணெய் வகைகளை
ஆட்டி எடுத்து கலப்படமில்லாமல் சாப்பிடுகிறார்கள்,
மண்பாண்டங்கள், பானை,
சட்டி, தட்டு, மண் அடுப்பு, இரும்பு வாணலி, தோசைக் கல், தாளிக்கும்
கரண்டி, குழிப்பணியாரச் சட்டி, ஆப்பச் சட்டி ஆகியவைகளை உபயோகிக்கிறார்கள்.
இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும். பக்க விளைவுகள் இராது.
எதிர்காலத்தில்
கிராமத்து உணவு வகைகளின் முக்கியத்துவத்தையும், மண்பாண்டங்களின்
உபயோகத்தையும் தெரிந்து கொண்டு நோயற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டும் என்ற
நோக்கத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட சமையல் குறிப்பாகும்.
நம் கிராமத்து சமையல் - Nam Gramathu Samayal
- Brand: ஆர். லோகநாயகி
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹60
-
₹51
Tags: nam, gramathu, samayal, நம், கிராமத்து, சமையல், -, Nam, Gramathu, Samayal, ஆர். லோகநாயகி, கண்ணதாசன், பதிப்பகம்