• நாமக்கல் கவிஞர் பாடல்கள்  - Namakkal Kavignar Paadalgal
பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் ;     பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும் ;     கூட்டாளி வர்க்கங்கள் குணம்மாற வேண்டும் ;     குற்றேவல் தொழிலென்ற மனம்மாற வேண்டும் ;     வீட்டொடு தான்மட்டும் சுகமாக உண்டும்     வேறுள்ளோர் துன்பங்கள் கண்ணாரக் கண்டும்     நாட்டோடு சேராத தனிபோக உரிமை     நடவாதிங் கினியென்று நாமறிதல் பெருமை.     உடலத்தின் வடிவத்தில் பேதங்கள் உண்டு ;     உள்ளத்தின் எண்ணத்தில் வித்யாசம் உண்டு ;     சடலத்தை ஆள்கின்ற பசிதாகம் எல்லாம்     சகலர்க்கும் உலகத்தில் சமமான தன்றோ!     கடலொத்த தொழிலாளர் வெகுபாடு பட்டும்     கஞ்சிக்கு வழியின்றிக் கண்ணீரைக் கொட்டும்     மடமிக்க நிலைமைக்கு மாற்றில்லை யானால்     மனிதர்க்கிங் கறிவுள்ள ஏற்றங்கள் ஏனோ?

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நாமக்கல் கவிஞர் பாடல்கள் - Namakkal Kavignar Paadalgal

  • ₹220


Tags: namakkal, kavignar, paadalgal, நாமக்கல், கவிஞர், பாடல்கள், , -, Namakkal, Kavignar, Paadalgal, நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, சீதை, பதிப்பகம்