மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன்.
நன்மையையும் தீமையையும் இந்தச் சிந்தனைதான் கொண்டு வருகிறது. ஒன்றா,
இரண்டா ! படுத்தால் ஒன்று, எழுந்தால் ஒன்று ஆயிரம் சிந்தனைகள்.
ஒவ்வொன்றுக்கும் வடிவம் கொடுத்துப் பார்த்தால் பைத்தியம் தெளிந்தாலும்
தெளியும்; பிடித்தாலும் பிடிக்கும். இந்த நம்பிக்கை மலர்கள் பைத்தியம்
தெளிவதற்காகவே; பைத்தியம் பிடிக்கக்கூடிய மலர்களை இதில் சேர்க்கவில்லை:
எல்லாமே 'கல்கி'யின் கூந்தலுக்காக என் இதயத் தோட்டத்தில் மலர்ந்தவை. மனிதன்
வாழ விரும்பினால் ஏதாவதொரு சிந்தனையின் மூலமே துயரங்களைச் சமாளிக்க
வேண்டும். துயரங்களை சமாளிப்பதற்கும் நம்பிக்கையோடு முன்னேறுவதற்கும் பல
விஷயங்களை இதில் தொடுத்திருக்கிறேன். என்னதான் ஆயிரம் படித்து நம்பிக்கை
கொள்ள முயற்சித்தாலும், பல நேரங்களில் வரும் துன்பங்கள் நம்பிக்கையை
இழக்கத்தான் வைக்கின்றன. பல நேரங்களில் தெய்வ நம்பிக்கை கூட வெறுத்துப்போய்
விடுகிறது.
என்ன
செய்வது, பிறந்தாகிவிட்டது; வாழ்ந்தாக வேண்டுமே? அது குருட்டு நம்பிக்கையோ
மூட நம்பிக்கையோ, எவன் எந்த பெயர் சொன்னாலும் சரி, நம்பிக்கை ஒன்று தான்
அதற்கு வழி. இந்த நூலை படித்ததும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா
பாருங்கள்.
நம்பிக்கை மலர்கள் - Nambikai Malargal
- Brand: கவிஞர் கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹130
-
₹111
Tags: nambikai, malargal, நம்பிக்கை, மலர்கள், -, Nambikai, Malargal, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்