இதுபற்றி ஒரு கதையும் வழங்கிவருகிறது. மூன்றாம் நந்திவர்மன்மேல் பொறாமை கொண்ட அவனுடைய தம்பியே ஒரு கவிஞனாக வந்து அவன் மீது கலம்பகம் பாடினானாம். அந்நூலில் ஆங்காங்கு நச்சுச் சொற்களையும் தொடர்களையும் வைத்துத் தன்னைக் கொல்லப் பாடியிருக்கிறான் என்று நந்திவர்மனுக்குத் தெரிந்தும் தமிழ்ச் சுவையில் ஈடுபட்ட அவனால் அந்நூலைக் கேட்காமல் இருக்க இயலவில்லை. எனவே நூறு பந்தல்கள் இட்டு ஒவ்வொன்றிலும் அமர்ந்து ஒவ்வொரு பாட்டாக அவன் கேட்டுக் கொண்டு வர ஒவ்வொரு பந்தலாகத் தீப்பற்றி எரிந்ததாம். கடைசிப் பாட்டை நந்திவர்மன் கேட்கும் போது பந்தலோடு சேர்ந்து அவனும் மாண்டான் என்று இக்கதை செல்கிறது. இது நந்திவர்மனுடைய அளவற்ற தமிழ்ப் பற்றினைக் காட்ட எழுந்த கதையாக இருக்கலாம்.
நந்திக் கலம்பகம் மூலமும் உரையும் - Nandhi Kalambagam Moolamum Uraiyum
- Brand: டாக்டர் கதி. முருகேசன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80
Tags: nandhi, kalambagam, moolamum, uraiyum, நந்திக், கலம்பகம், மூலமும், உரையும், , -, Nandhi, Kalambagam, Moolamum, Uraiyum, டாக்டர் கதி. முருகேசன், சீதை, பதிப்பகம்