• நரேந்திர மோடி
வளர்ச்சியின் நாயகன் என்று மோடியை வர்ணிக்கிறார்கள். நாளைய இந்தியாவை வழிநடத்தப் போகிறார் என்கிறார்கள்.ஊழலற்ற, வலிமையான இந்தியாவை மோடியால் மட்டுமே உருவாக்க முடியும் என்கிறார்கள்.ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது இத்தனை தூரத்துக்கு நம்பிக்கை உருவானது எப்படி? சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டராக அரசியல் பணியைத் தொடங்கி இன்று இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் மோடியின் அரசியல் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு அங்குலத்தையும் நுணுக்கமாக பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். கல்வி, மின்சாரம், விவசாயம், உள்கட்டமைப்பு, மருத்துவம் என்று ஒவ்வொரு துறையிலும் மோடியின் சாதனைகளை விவரித்துச் சொல்லும் அதே வேலையில், கோத்ரா வன்முறை, குஜராத் கலவரம், போலி என்கவுண்ட்டர், இளம்பெண்ணை உளவுபார்த்த விவகாரம் என்று மோடியின் மீதான விமரிசனங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர். நீண்ட தேடலுக்கும் விரிவான ஆய்வுக்கும் பிறகு உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், குஜராத் வளர்ச்சியில் மோடியின் பங்களிப்பை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நரேந்திர மோடி

  • ₹199


Tags: narendhra, modi, நரேந்திர, மோடி, எஸ்.பி.சொக்கலிங்கம், Sixthsense, Publications