• நீ பாதி நான் பாதி
2009-ல் ‘கமலஹாசனும் காளிமுத்துவும்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்நூல் ‘நீ பாதி... நான் பாதி...’ என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. ==================================================================== நான் திவ்யா. நான் உங்களுடன் சற்று நேரம் பேச வேண்டியிருக்கிறது. நான் ஒரு கால் சென்டரில் பணிபுரிகிறேன். என்னுடைய டீம் லீடர் வினோத் உயரமாக அழகாக இருப்பான். அவன் என்னைப் பார்த்த பார்வையில் ஒரு பிரத்யேக வித்தியாசம் தெரிந்தது.பேச்சில் எனது கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகள் தெரிந்தன. . “நீங்க ஒன் நைட் அட் தி கால் சென்டர்” படிச்சிருக்கீங்களா?” என்றான். “ம்... சேட்டன் பகத்” என்றேன். “பீஸ் ஆஃப் மீ கேட்டுருக்கீங்களா?” “ம்... பிரிட்னி ஸ்பியர்ஸ்.... இங்க பாருங்க...ஒரே ரசனை இருந்தா லவ்வுங்கிறதெல்லாம் ஓல்டு ஸ்டைல். மேலும் அதெல்லாம் உங்களுக்குத் தேவையுமில்ல. இந்த ஃபிலிமெல்லாம் காட்டாமலே உங்களுக்கு ஃபிகருங்க விழும்” “நீங்க விழுந்துட்டீங்களா?” “ம்... விழறப்ப சொல்றேன். வந்து தூக்கிவிடுங்க.” பிறகு வந்த நாட்களில் என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி ஒரு பிப்ரவரி 14-ல் பாரிஸ்டா காஃபி ஷாப்பில் எக்ஸ்பிரஸ்ஸோவிற்கு ஆர்டர் செய்துவிட்டு, “எனக்கு உன் மேல டைரக்டர் பாலாஜி சக்திவேலோட இரண்டாவது படம் வந்துருச்சு?” என்றான். “என்ன வந்துருச்சு?” என்றேன் புரியாமல். “காதல்” என்று ரோஜாப்பூவை நீட்டிய வினோத், “இதுதான் என்னோட கடைசி ஜென்மம்னு ஜோசியக்காரர் சொல்லியிருக்காரு. என் கடைசி ஜென்மக் காதல ஏத்துக்க திவ்யா” என்றான்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நீ பாதி நான் பாதி

  • ₹200


Tags: nee, paadhi, naan, paadhi, நீ, பாதி, நான், பாதி, ஜி.ஆர்.சுரேந்தர்நாத், Sixthsense, Publications