இன்றைக்கு எண்பதாண்டுகளுக்கு முன்பு, நிலவுடைமை அமைப்பு வலுவாகக் கோலோச்சியிருந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நீடாமங்கலத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது ஏற்பாடு செய்திருந்த சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டதற்காகத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இருபதுபேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எந்தக் கட்சியும் கிளர்ந்தெழாத நிலையில் பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் அவர்கள் சார்பில் முனைந்து போராடியது. வன்கொடுமைக்குக் காரணமான நிலக்கிழார் பார்ப்பனரல்லாத உயர்சாதியினராக இருந்தபொழுதும் பெரியார் உறுதியுடன் நீதிமன்றம் வரை சென்று போராடினார். இந்த இழிவன்கொடுமையை அதனுடைய வரலாற்றுச் சூழலில் பொருத்தி ஏராளமான ஆவணங்கள், சமகாலச் செய்திகள், கள ஆய்வுத் தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தி சேரன்மாதேவி, முதுகுளத்தூர், கீழ்வெண்மணி முதலான குறியீட்டு முக்கியத்துவமுடைய நிகழ்வாக நீடாமங்கலத்தை முன்னிறுத்தியிருக்கிறார் ஆ. திருநீலகண்டன். திராவிட இயக்கத்துக்கும் தலித்துகளுக்குமான உறவு நிலை பற்றிய ஆய்வுக்கு இந்நூல் முக்கியப் பங்களிப்பாகும்.This Book deals in detail the atrocities done to the Dalits at Needamangalam and the Relation between the Dalits and Dravida kazhagam
Needamangalam
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹175
Tags: Needamangalam, 175, காலச்சுவடு, பதிப்பகம்,