• நீலப் பசு - Neela Pasu
லதானந்தின் கதைகள் அருவிபோல விழுந்து, வனங்களில் புகுந்து, சமவெளிகளில் பாய்ந்தோடும் ஆறுகள் போன்றன. கதைகளில் அவரது அனுபவங்களுடன், கதைமாந்தர்கள் அனைவரும் மண்ணின் மொழி பேசி உலவிக்கொண்டிருப்பார்கள். காரணம், லதானந்த் பணியாற்றிய வனத்துறையும், அவருடன் பழகிய மனிதர்களும்தான். வனத்துறை அதிகாரியாக காடுகளில் பயணித்து, காட்டுநடப்பும், நாட்டுநடப்பும் அறிந்தவர் என்பதால் வனவிலங்குகள், அருவிகள், மரம், செடிகொடிகளையும், அதையொட்டி வாழும் பழங்குடிமக்களின் இயல்புகளையும் கதைகளில் இணைத்து சுவாரசியமாக்கி இருக்கிறார். ‘கடைசிக் குறிப்பு’, ‘தொர்சானி’ போன்ற கதைகளில், காடுகளில் நிகழும் அமானுஷ்ய சக்திகளையும், வனங்களின் வினோதங்களையும் மர்மநடையில், எதிர்பாராத முடிவுகளோடு அமைத்திருக்கிறார். நகரங்களில் நிகழும் கதைகள், நகைச்சுவை உணர்வையும், நம் நிஜ வாழ்வில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களின் உணர்வையும் தருகின்றன. மரஞ்செடிகொடிகளின் தாவரவியல் பெயர்களையும், நீலப் பசு, (நீல்கை) போன்ற வனவிலங்குகளின் பெயர்களையும் அறிமுகப்படுத்தும் உத்தி வியக்க வைக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நீலப் பசு - Neela Pasu

  • Brand: லதானந்த்
  • Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
  • Availability: In Stock
  • ₹250


Tags: neela, pasu, நீலப், பசு, -, Neela, Pasu, லதானந்த், டிஸ்கவரி, புக், பேலஸ்