சேலம் மாவட்டம். ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இரா.பாரதிநாதன். தற்போது சென்னையில் வசிக்கிறார். இதுவரை எட்டுப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ‘நீலக்குறிஞ்சி’ இவரது ஒன்பதாவது புத்தகம். இதையும் சேர்த்து ஐந்து நாவல்கள், இரண்டு கட்டுரைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு என இலக்கியத் தளத்தில் விரிந்து இயங்குபவர். தனது எழுத்துகளில் வர்க்கக் கண்ணோட்டம் இருக்கவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவர். இவரது முதல் நாவலான ‘தறியுடன்...’, இயக்குநர் ‘வெற்றிமாறன் தயாரிப்பில் ‘சங்கத்தலைவன்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. மேலும், இவரது சிறுகதையான ‘மாட்டுக்கறி’ திரைப்படத் தயாரிப்பில் உள்ளது.
இதுவரை இவரது கதைகளில் காதல் வந்திருந்தாலும், முழுக்க முழுக்க காதலையே மையமாக வைத்து எழுதியிருக்கும் நாவல் ‘நீலக்குறிஞ்சி’.
நீலக்குறிஞ்சி - Neelakkurinji
- Brand: இரா.பாரதிநாதன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹300
Tags: neelakkurinji, நீலக்குறிஞ்சி, -, Neelakkurinji, இரா.பாரதிநாதன், டிஸ்கவரி, புக், பேலஸ்