நம் சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளை நல்ல நகைச்சுவையுணர்வுடன் விமர்சிக்கும் கட்டுரைகள் இவை. அதுமட்டுமன்றி, ஆழ்ந்த சங்க இலக்கிய மற்றும் பழந்தமிழிலக்கிய வாசிப்புள்ள தோழர் சோ.முத்துமாணிக்கம், இன்றைய நிகழ்வுகளை அன்றைய இலக்கிய வரிகளுடன் இணைத்துப் பேசும் பாங்கு சுவைமிக்கது. நல்ல மொழி வளத்துடனும் சமூக அக்கறையுடனும் நகைச்சுவை உணர்வுடனும் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகளை வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள்.‘- ச. தமிழ்ச்செல்வன்*சமூக அக்கறையும் மொழியுணர்வும் சூழலியல் குறித்த கரிசனமும் மானுடம் குறித்த நம்பிக்கையும் எதிர்காலம் குறித்த கனவும் கொண்ட நூல் இது. அனிதாவின் தற்கொலை தொடங்கி கீழடி வரையிலான சமகால நிகழ்வுகள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தை நோக்கியும் அதிகார அமைப்புகளை நோக்கியும் மட்டுமல்ல, நம்முடைய கூட்டு மனச்சாட்சியை நோக்கியும் விரலை உயர்த்தி பல சங்கடமான அதே சமயம் உண்மையான கேள்விகளை எழுப்புகிறது இந்நூல்.தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளிவந்து பலருடைய பாராட்டுகளைப் பெற்ற சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு.
NeelaThimingilam Mudhal Bigboss Varai/நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
- Brand: பழனி.சோ.முத்துமாணிக்கம்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: , பழனி.சோ.முத்துமாணிக்கம், NeelaThimingilam, Mudhal, Bigboss, Varai/நீலத்திமிங்கிலம், முதல், பிக்பாஸ், வரை