இடைவிடாது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு யுத்தம், அதில் ஈடுபட்டிருக்கும் தன் பிள்ளை, எதுவோ விரும்பத்தகாதது நிகழப்போகிறது என்ற கிலேசம், தன்னை வந்து அடையப்போகும் கெட்ட செய்தியைத் தவிர்க்க வீட்டிலிருந்து வெளியேறி வயல்கள் ஓடைகள், ஆறுகள், மலைகள் என நெடிய நடைபயணத்தை மேற்கொள் கிறாள் தாய். ஒரு குடும்பத்தையும் அதனோடு பின்னப்பட்ட உறவுகளையும் ஒரு யுத்தம் எப்படி உள்ளும் புறமுமாகப் பாதித்து கடும் சிக்கலுக்கு ஆளாக்கவியலும் என்பதை அதிகமும் தனக்கும் தனது பிள்ளைக்குமான ஒரு தாயின் நினைவுப் பின்னணியில் வைத்து விவரிக்கும் இந்நாவல் நம் காலத்தின் மிகச் சிறந்த யுத்த எதிர்ப்பு நாவல். ஒரு இஸ்ரேலியப் படைவீரனது தாயின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் இஸ்ரேலிய - பாலஸ்தீனிய யுத்தத்தைப் பக்கச் சார்பின்றி அணுகியிருக்கும் நூலாசிரியர் இஸ்ரேலிய அரசாங்கத்தையும் தொடர்ந்து தீவிரமாக விமர்சித்து வருபவர். இஸ்ரேலியப் படைவீரனான தனது மகனை யுத்தத்தில் பறிகொடுத்தவர். ஒருவிதத்தில் நாவலில் வரும் தாயான ஓரா, டேவிட் கிராஸ்மன்தான். எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் படையிலிருக்கும் தனது மகனை இந்நாவல் காப்பாற்றும் என அவர் நம்பினார். நிதானமும் அழகும் கூடிய ஒரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு இது.This stunning, bestselling novel by David Grossman, translated in tamil by Asadha, tells the powerful story of a mother’s love for her son. Just before his release from service in the Israeli army, Ora’s son Ofer is sent back to the front for a major offensive. In a fit of preemptive grief and magical thinking, so that no bad news can reach her, Ora sets out on an epic hike in the Galilee. She is joined by an unlikely companion—Avram, a former friend and lover with a troubled past—and as they sleep out in the hills, Ora begins to conjure her son. Ofer’s story, as told by Ora, becomes a surprising balm both for her and for Avram—and a mother’s haunting meditation on war and family.
Nilathin Vilimbukku
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹750
Tags: Nilathin Vilimbukku, 750, காலச்சுவடு, பதிப்பகம்,