அவள் சொன்ன மாதிரியே குழாய் ரிப்பேர் செய்பவனும் வீட்டுக்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கேயிருந்த நாய் ஒரு மூலையில் அமைதியாகப் படுத்திருந்தது. கிளிதான் அவனை வேலை பார்க்கவிடாமல் தொண தொணத்தது. பொறுமை இழந்துபோய், ‘அறிவு கெட்ட கிளியே வாயை மூடு’ என்று கத்தினான் அவன். அதற்கு அந்தக் கிளி என்ன சொன்னது தெரியுமா? ‘டைகர், அவனைக் கடி டைகர்.’ அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த மாதிரியான நூற்றுக்கணக்கான சிரிப்பு வெடிகளை உள்ளடக்கியது இப்புத்தகம்.குழாய் ரிப்பேர் செய்பவனுக்குப் போன் செய்து, “எங்க வீட்டுக் குழாய்களை இன்றைக்குக் கட்டாயம் ரிப்பேர் செய்துவிடு. நான் இன்று வீட்டில் இருக்கமாட்டேன். ஆனால் எங்கள் வீட்டில் ஒரு பெரிய நாய் இருக்கும். அது உன்னை ஒண்ணும் பண்ணாது. ஆனா என்ன பண்ணினாலும் எங்க வீட்டுக் கிளியோட மட்டும் ஒரு வார்த்தை கூடப் பேசிடாதே” என்று சொன்னாள் அந்தப் பெண்.
Tags: nilgavani, siri, , நில்…கவனி…சிரி, ப்ரியா பாலு, வானவில், புத்தகாலயம்