நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது. புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கதையை கொண்டிருக்கிறான். வலியாலும் வேதனையாலும் ததும்பும் அந்தக் கதை மனித துயரத்தின் சாட்சியம். நிமித்தம் அப்படி தொடர்ந்த அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளான காதுகேளாத ஒருவனின் கதையை விவரிக்கிறது. தேவராஜ் ஒரு கதாபாத்திரமில்லை. மாற்றுத்திறனாளிகளை நம் சமூகம் நடத்தும் அவலத்தின் அடையாளம். அவனது வாழ்க்கையின் இடைவெட்டாக தமிழ்ச்சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் ஊடாடுகின்றன. மாயமும் யதார்த்தமும் மாறிமாறி பின்னப்பட்டு மாபெரும் கதையாடலாக விரிவுகொள்வதே இந்த நாவலின் தனிச்சிறப்பு.
நிமித்தம் - Nimiththam Desanthiri
- Brand: எஸ்.ராமகிருஷ்ணன்
- Product Code: தேசாந்திரி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹450
Tags: nimiththam, desanthiri, நிமித்தம், -, Nimiththam, Desanthiri, எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி, பதிப்பகம்