ஓர் அபத்தமான நாள் முப்பது வருட நீட்சியுடன் முடிவடையாமல் தொடர்வது எப்படி? அது முடிவடையும் கணத்தில் மானுடக் கருணையின் மாபெரும் வெறுமை கவிவது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையிலான பதிலைத் தேடுகிறது ‘நிழலின் தனிமை’. காமம், அதையொட்டிய அதிகாரம், அதற்கெதிரான வஞ்சினம், பழி தீர்க்கும் வெறி என்று மன இருளின் வெவ்வேறு நிற பேதங்களைச் சொற்கள் மூலம் உருவாக்குகிறது இந்த நாவல். தாம் மட்டுமே அறிந்த இருளுக்குள் தீர்மானத்துடனும் நோக்கமின்றியும் இயல்பாக நடமாடும் வெவ்வேறு பாத்திரங்கள் அந்த நிழல் நிறச் சொற்களை இயக்குகிறார்கள். வார்த்தைகளுக்குள் வசப்பட மறுக்கும் கொந்தளிப்பை காட்சிகளாகவும் அந்தக் காட்சிகளை உண்மையின் விசாரணைகளாகவும் முன்வைப்பதில் தேவிபாரதி அடைந்திருக்கும் வெற்றிக்குச் சாட்சியுமாகிறது நாவல். உள் அடுக்குகளில் நுட்பமாக நிகழும் உளவியல் அலசலும் சமூக விமர்சனமும் புனைவைக் கதை கடந்த எல்லைக்குக் கொண்டுசெல்கின்றன. மனித மனத்தின் ததும்பல்களையும் சீற்றத்தையும் பகையையும் வேட்கையையும் தந்திரத்தையும் அவமானத்தையும் தோல்வியையும் இவ்வளவு தீவிரத்துடன் வெளிப்படுத்தும் படைப்பு இது.
Nizhalin thanimai
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹125
Tags: Nizhalin thanimai, 125, காலச்சுவடு, பதிப்பகம்,