நோய்க்கு எதிரான ஓர் ஆற்றல் இருந்தால்தான் நோய் குணமடையும். இந்த நோய் எதிராற்றலை எங்கே கண்டறிவது? நோய் எதிராற்றல் என்பது தினசரி நம்முடைய உடலில் நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுதான். நோய்க் கிருமிகள் உடலைத் தாக்கும்போது இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் அவற்றை அழிக்கின்றன. சில செல்கள் தங்களால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக்கொண்டு மீண்டும் அதுபோன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. இயற்கையிலேயே அதிசயமாக அமைந்திருக்கும் இந்தக் கட்டமைப்பு நமது உடலுக்குள் இயங்கி எந்த நோய்க்கும் நாம் ஆட்படாமல் பாதுகாக்கிறது. நோய் எதிராற்றலை நமக்கு அளிப்பவை திசுக்களே. நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்தல், நச்சுகள், தேவையற்ற கழிவுகள் போன்றவற்றை நீக்கி உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றைத் திசுக்களே செய்கின்றன என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் மருத்துவர் க.சம்பத்குமார். ஜலதோஷம், ஃப்ளூ போன்ற தொற்று நோய்களை விரட்டியடிக்க அதிகத் தண்ணீர் குடிப்பது நல்லது. இது கிருமிகளையும் அவற்றின் நச்சுப் பொருட்களையும் வெளியேற்ற நிணநீர் மண்டலத்துக்கு பெரிதும் உதவும். ஆனால், தண்ணீரை எப்படிக் குடிப்பது, எவ்வளவு நீரை உட்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றலைப் பெறலாம் போன்றவற்றை ஆய்வுத் தகவல்களுடன் அள்ளித் தருகிறார் நூலாசிரியர். எலும்பும் தோலும் போர்த்திய மனித உடம்புக்குள் எத்தனை அதிசயங்கள்? இந்த நூலைப் படித்து முடிக்கும் போது, உங்கள் உடலுக்கு நீங்களே ஆற்றல்மிக்க மருத்துவராகும் அதிசயமும் நடக்கும்.
நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும்
- Brand: டாக்டர் க. சம்பத்குமார்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹120
-
₹102
Tags: noei, ethiraatralum, paripoorna, aarokyamum, நோய், எதிராற்றலும், பரிபூரண, ஆரோக்கியமும், டாக்டர் க. சம்பத்குமார், விகடன், பிரசுரம்