இன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் மனித வாழ்வோடு ஒன்றி விட்டது. விரட்ட முடியாத நிலைக்கு நோய்கள் வந்து விட்டன. மனிதனின் உடலும் மனமும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நோயால் அவதிப்படுபவர்கள் ஆங்கில மருத்துவத்தை நாடுகின்றனர். ஆங்கில மருத்துவம் உடனடி நிவாரணமே தவிர, நோயை முற்றிலும் தீர்க்கவல்ல சக்தி அதற்குக் கிடையாது என்று வாதிடுவோரும் அதிகரித்து வருகின்றனர். அதனால்தான் இப்போதெல்லாம் ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் போன்ற மாற்று மருத்துவ முறைகளுக்கு மவுசு ஏறிவருகிறது. அதேவேளையில், மன அமைதி பாதிக்கப்படுபவர்கள் பல்வேறு யோகாசனங்களையும், தியானங்களையும், மூச்சுப் பயிற்சிகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், நோய், மன சஞ்சலம் ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு ரெய்கி என்ற அற்புதக் கலை தான் என்கிறார் நூல் ஆசிரியர் அமுதவன். அப்படியென்ன ரெய்கியில் அற்புதம் இருக்கிறது? நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்தி அதாவது காஸ்மிக் எனர்ஜியைப் பயன்படுத்தும் கலைதான் ரெய்கி. பிரபஞ்ச சக்தியை வைத்தே நோயை குணப்படுத்துவது மட்டுமல்ல ரெய்கியின் மூலம் அற்புதங்களையும் நிகழ்த்தலாம் என்கிறார். அது என்ன அற்புதம்? மற்ற மருத்துவங்களில் நோயாளியைத் தொட்டுப் பார்த்து நோய் அறிகுறியைக் கண்டறிந்து மருந்து கொடுப்பது வழக்கம். ரெய்கியில் அப்படி அல்ல... நோயாளியைத் தொடவும் தேவையில்லை, மருந்துக்கும் வேலையில்லை. இன்னும் என்னென்னவோ அற்புதங்கள். ரெய்கியின் மூலம் நோய் தீர்க்கும் அற்புதங்களை நீங்களும் அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.
நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி
- Brand: அமுதவன்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹120
-
₹102
Tags: noei, theerkkum, arputha, reiki, நோய், தீர்க்கும், அற்புத, ரெய்கி, அமுதவன், விகடன், பிரசுரம்