• நோய் தீர்க்கும் கீரைகள்-Noi Theerkum Keeraigal
“கீரை நல்லது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும், நாம் வழக்கமாக உண்ணும் உணவில் கீரை இடம்பெறுவதில்லை. இதற்குக் காரணம் நம் புரிதல் குறைபாடுதான். பொத்தாம்பொதுவாக கீரை நல்லது என்று தெரியுமே தவிர, உண்பதற்கு தோதாக எத்தனை வகை கீரைகள் உள்ளன என்றுகூட நம்மில் பலருக்கும் தெரியாது.காரணம், முற்றிலும் ஆரோக்கியமற்றதாக நம் உணவு வழக்கம் மாறிவிட்டது. நம் பாரம்பரியமான உணவு வகைகளை விலக்கிவைத்துவிட்டு நாகரிகம் என்று வெவ்வேறு ஆரோக்கியமற்ற பதார்த்தங்களைச் சாப்பிடப் பழகிக்கொண்டுவிட்டோம். அவற்றின் ருசிக்கும் ஆட்பட்டுவிட்டோம். விளைவு? வயது வேறுபாடின்றி குறைபாடுகளும் வியாதிகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன.எனவே ஆரோக்கியம் அளிக்கும் கீரைகளுக்கு நாம் உடனடியாகத் திரும்பவேண்டியிருக்கிறது. என்னென்ன வகை கீரைகள் உள்ளன? அவற்றின் விசேஷ குணங்கள் என்னென்ன? எந்தக் கீரையை எப்போது உட்கொள்வது? எது பார்வைத் திறனை அதிகரிக்கும்? எது இதயத்துக்கு நல்லது? எது புத்துணர்ச்சி அளிக்கும், எதிர்ப்புச்சக்தியை வளர்க்கும்? முதியவர்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற கீரைகள் என்னென்ன?அனைத்துக்கும் இதில் விளக்கமாகப் பதிலளிக்கிறார் நூலாசிரியர் சுப்ரமணி. ‘ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள்’, ‘நோய் தீர்க்கும் பழங்கள்’ போன்ற மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல்களை எழுதியவர்.இனி நம் ஒவ்வொருவரின் உணவிலும் கீரை இடம் பெறவேண்டும். அதற்கு நம் ஒவ்வொருவரின் மேஜையிலும் இந்தப் புத்தகம் அவசியம்.”

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நோய் தீர்க்கும் கீரைகள்-Noi Theerkum Keeraigal

  • ₹150


Tags: , கே.எஸ். சுப்பிரமணி, நோய், தீர்க்கும், கீரைகள்-Noi, Theerkum, Keeraigal