உடல்நலத்தைக் காப்பதில் பழங்கள் முதலிடம் வகிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பழங்கள் நமது குணங்களைக் கூட ஆளுமை செய்யும் சக்தி வாய்ந்தவை என்பது உங்களுக்குத் தெரியுமா?இயற்கையான முறையில் நல்ல ஆரோக்கியத்தையும் நீடித்த உடல்நலனையும் பெறுவதற்கான முதல் படி, நம் உணவில் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வதுதான். நமக்கு நன்கு பரிச்சயமான பல பழங்களில் நாம் அறியாத பல நன்மைகள் ஒளிந்துள்ளன. அவற்றைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால் நாம் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு உடல் உபாதைகளை உதறித் தள்ளமுடியும்.மேற்கத்திய உணவு வழக்கத்துக்கு வேகவேகமாக மாறி–வரும் இன்றைய தலைமுறையினருக்கு இயற்கையின் அற்புத கொடைகளான பழங்களின் மகத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்னும் நோக்கத்தில் கே.எஸ். சுப்ரமணியன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் கிட்டத்தட்ட 40 வகை பழங்களின் மகத்துவமும் மருத்துவக் குணங்களும் எளிமையான முறையில் தொகுக்கப்-பட்டுள்ளன. இவற்றை நமது உணவில் நாள்தோறும் சேர்த்துக் கொண்டால் நோய்களிலிருந்து விடுபடலாம் என்பது மட்டுமல்ல, நோய்களே நம்மை அண்டாமல் பார்த்துக்-கொள்ளலாம் என்பதும் நிச்சயம்.
நோய் தீர்க்கும் பழங்கள்-Noi Theerkum Pazhangal
- Brand: கே.எஸ்.சுப்ரமணி
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹225
Tags: , கே.எஸ்.சுப்ரமணி, நோய், தீர்க்கும், பழங்கள்-Noi, Theerkum, Pazhangal