• நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது-Nooru Sathavitha Poruthamana Yuvathiyai
ஜப்பானிய இலக்கியத்தின் பின் நவீனத்துவ எழுத்தாளராக அறியப்படுபவர் ஹாருகி முரகாமி (Haruki Muralami). ஜப்பான் இலக்கியங்களை தேடிப்பார்த்தால் அவைகள் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ஜப்பானின் கலாச்சார வீழ்ச்சியையும் மனித அவலங்களையும் பின்புலமாக கொண்டிருக்கும். அல்லது ஆன்மிக சிந்தனைகளை பறைசாற்றுவதாக இருக்கும். அதற்கு மாற்றாக முரகாமியின் படைப்புகள் அனைத்தும் ஐரோப்பிய தாக்கத்தில் மரபுசார்ந்த ஒழுக்கங்களை கைவிட்ட மனிதர்களின் இருப்பை தாங்கியிருக்கிறது. அதில் பாலியல் பிரச்சனைகள் முதன்மையாக இருக்கிறது. ஒருவகையில் மனிதனின் இருப்பு பாலியல் வேட்கையாகவே இருக்கிறது. தனது அடையாளங்களை தொலைத்து நவீனமாக மாறும் ஜப்பான் நாடுதான் அவரது கதைகளின் களம். அங்கு நிழவிவந்த குடும்ப உறவுகளையும், ஆன்மீக சிந்தனைகளையும், ஒழுக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் மீறிய மனிதர்கள்தான் அவரது கதைமாந்தர்கள். அவர்களின் மீறலால் எழுந்த புதிய தர்மசங்கட நிலைதான் அவரது கதையின் அடித்தளம். சுருக்கமாகச் சொன்னால் நவீன ஜப்பான் இளைஞர்களின் மனம்தான் அவரது எழுத்தின் மையப்புள்ளி.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது-Nooru Sathavitha Poruthamana Yuvathiyai

  • ₹170


Tags: nooru, sathavitha, poruthamana, yuvathiyai, நூறு, சதவீத, பொருத்தமான, யுவதியை, ஓர், அழகிய, ஏப்ரல், காலையில், பார்த்தபோது-Nooru, Sathavitha, Poruthamana, Yuvathiyai, ஜி. குப்புசாமி, ஹாருகி முரகாமி, வம்சி, பதிப்பகம்