நாஸ்டிரடாமஸ் பிரெஞ்சு ராணி காதரீனை 1564&ஆம் ஆண்டு போய்ப் பார்த்த வேளையில், ராணி தான் தங்குவதற்காக இப்போது டூலரிஸ் மாளிகை என்றழைக்கப்படும்... அப்போது செயின்ட் ஜெர்மெயின் என்று அழைக்கப்பட்ட மாளிகையைக் கட்டிக் கொண்டிருந்தார். தன் மரணம் எப்போது நிகழும் என்று கூறும்படி நாஸ்டர்டாமைக் கேட்டார் ராணி. நாஸ்டிரடாமஸ் சொன்னார்: செயின்ட் ஜெர்மெயின் அருகே நிகழும் என்று. பயந்து போன ராணி அதற்குப் பிறகு அந்த மாளிகை இருந்த பாரீஸ் பக்கமே தலைவைத்தும் படுக்கவில்லை. அங்கிருந்து 200 மைல் தொலைவிலிருந்த பிளாய் என்ற ஊரில்தான் வாழ்நாள் முழுவதும் தங்கினார். 23 வருடங்கழித்து அவர் இறந்தபோது அவருக்கு அருகே இருந்த பாதிரியாரின் பெயர் ‘செயின்ட் ஜெர்மெயின்’. இப்படி இவர் கூறிய ஆருடங்கள் ஆயிரமாயிரம். அவர் சொன்னதெல்லாமே நடந்தன. அவற்றில் சுவாரசியமான பலவற்றை இந்தப் புத்தகத்தில் பார்க்கப் போகிறோம்.
நாஸ்ட்ரடாமஸ் சொன்னார் நடந்தது
- Brand: டி.கிருஷ்ணகாந்த்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹115
Tags: nostradamus, sonnar, nadandhadhu, நாஸ்ட்ரடாமஸ், சொன்னார், நடந்தது, டி.கிருஷ்ணகாந்த், Sixthsense, Publications