தேன்மொழி தாஸின் மூன்றாம் கவிதைத் தொகுப்பு இது.
கவிதைக்கேயான தனித்துவம் வாய்ந்த மொழியின் பிரயோகத்தில், புதுமை செறிந்த நவீன வெளிப்பாட்டு முறையில் முன்னிரு தொகுப்புகளிலிருந்து வித்தியாசமானவை இக்கவிதைகள். பிரிவுகளும் இழப்புகளும் ஏற்படுத்தும் வலிகளால் பெரும் துக்கத்தில் கனன்றுகொண்டிருக்கும் மனம் - 'பிரிவை அருந்த'த் தாகத்தோடிருக்கும் மனம் - தனிமையின் படுகுழியிலிருந்து தன்னை மீட்டெடுக்க முனையும் தவிப்பின் கலை வெளிப்பாடுகள் இவை
இயற்கையின் மீதான 'மோகம்' இலக்கிய மோஸ்தராகிப்போன இன்றைய சூழலில் மலைப்பிரதேசத்தின் பசுமைப் பின்புலம் மனத்துள் கிளர்த்தும் நெகிழ்ச்சி சற்றும் மிகையின்றி வெகு இயல்பாக இவரது கவிதைகள் முழுக்கவும் இழையோடிச் செல்கிறது.
oliyariya kattukul
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: oliyariya kattukul, 60, காலச்சுவடு, பதிப்பகம்,