காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கம் 1989இல் வெடித்தபோது பஷரத் பீர் பதின்வயதுகளில் இருந்தவர். பின்வந்த ஆண்டுகளில் எண்ணற்ற இலட்சியவாத இளைஞர்கள் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து பாகிஸ்தானிப் போர்முகாம்களில் பயிற்சிபெறச் செல்லுதல் நிகழ்ந்தது. பாதுகாப்பு வேண்டி, பீர் அலீகட்டிற்குப் படிக்க அனுப்பப்பட்டார். கல்லூரிப் படிப்பை முடித்து தில்லியில் பத்திரிகைப்பணி ஏற்றார். ஆனால் கோபமுற்ற, மேன்மேலும் மூர்க்கமாகிய, துணையற்றுப்போன காஷ்மீர் அவரிடமிருந்து ஒருபோதும் வெகு தொலைவில் இல்லை. அவரைப் பீடித்திருந்த கதைகளை மேலும் தேடுவதற்குத் தாயகத்திற்குச் சென்ற அவர், காஷ்மீரின், அதன் மக்களின், வேதனைமிக்க, ஆழமாக உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒரு சித்திரத்தை 'ஊரடங்கு இரவு நூலில் தீட்டுகின்றார். போரினால் அலைக்கழிக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கின் மறக்க முடியாத ஓவியமாக அமைகிறது - கவிதைநயமிக்க, உணர்வைத் தூண்டுகின்ற, நடுங்கச்செய்கின்ற இந்த எழுத்து. இன்றைய காஷ்மீரின் துல்லியமான, 'உள்ளிருப்பவன்' பார்வை.
Ooradangu iravu
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹225
Tags: Ooradangu iravu, 225, காலச்சுவடு, பதிப்பகம்,