சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை. இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆகவே, அவர்களுக்கும் வழிகாட்ட ஒருவர் தேவையாக இருக்கிறது. இளைஞர்கள் வாழ்க்கை ஆதாரத்துக்கு ஒரு வேலையைத் தேடிக்கொள்ளத்தான் வேண்டும். அவர்களும் வேலையைத் தேடி அலைகிறார்கள். ஒரு வேலைக்கு வேண்டிய ஆற்றல் என்னென்ன, ஒரு வேலையைப் பெறும் அளவுக்கு ஆற்றல்களை எளிதாக, சுலபமாக, அலட்டிக்கொள்ளாமல் வளர்த்துக் கொள்வது எப்படி, காம்படிட்டிவ் உலகத்தில் அதே ஆற்றலுடன் போட்டி போட்டுக்கொண்டு சக பந்தயக்காரர்கள் வந்தாலும் தாங்கள் ஒரு மாற்று அதிக பலத்துடன் வருவது எப்படி என்ற முன்னேற்ற வழிகளை நூல் ஆசிரியர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் பக்குவமாக எடுத்துச் சொல்கிறார். இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றப் பாதையைக் காட்டுகிறார். உண்மை, நேர்மை ஆகியவற்றை விட்டால்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்பதைத்தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அடிப்படைப் பண்புகளை விட்டு விடாமல் போட்டிகளில் ஜெயிக்க முடியும் என்று நம்பிக்கையை நூல் ஆசிரியர் ஊட்டுகிறார். அவர் ஏற்று நடத்திய பயிற்சிப் பாசறைகளில் இடம் பெற்ற கவர்ச்சியான போட்டிகள், அனுபவங்கள் ஆகியவற்றைக் கட்டுரையில் ஆங்காங்கே சொல்லியிருப்பது படிப்பதை விறுவிறுப்பாக்கி இருக்கிறது. நாணயம் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
ஒரு சிறகு போதும்
- Brand: டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹120
-
₹102
Tags: oru, siragu, podhum, ஒரு, சிறகு, போதும், டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம், விகடன், பிரசுரம்