• ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்!
பிறந்தபோதே ‘செரிப்ரல் பால்ஸி’ என்ற குறைபாட்டுடன் பிறந்து, அதனால், கை, கால் - மொத்த உடலின் இயக்கத்துக்காக பகீரதப் பிரயத்தனப்பட்ட தன்னம்பிக்கை பெண்மணி மாலினி சிப்பின் சுயசரிதை. ஒரே ஒரு விரலின் இயக்கத்தை வைத்துக்கொண்டு, பள்ளியில் படித்தது, இரவும் பகலும் இடையறாது போராடி இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றது, பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தியது, இந்த நூலை எழுதியது... இப்படி, கனவில்கூட நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை, தன் ஒற்றை விரல் யாகத்தால் சாதித்திருக்கிறார் மாலினி சிப்! சக்கர நாற்காலியிலேயே நகர்ந்து, வாழ்க்கை முழுவதும் எதிர் நீச்சல் அடித்து வெற்றி பெற்றவர். மாற்றுத்திறனாளி என்ற கோணத்தில் இந்தச் சமூகம் அவருக்கு ஏற்படுத்திய ரணங்களைச் சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறார். மாற்றுத் திறனாளிகள் இயங்குவதற்கு ஏற்றதாக இந்தியப் பொதுக் கட்டடங்கள் இல்லாததையும், அவர்களாலும் சாதாரணமாக இயங்க முடியும் என்று ஒட்டுமொத்த சமூகமும் சிந்திக்காததை எடுத்துக்காட்டி இருக்கிறார். ‘மாற்றுத்திறனாளியின் பெற்றோரின் காலம் முடிந்த பிறகும் அவர்கள் வாழ வேண்டாமா? அவர்களுடைய பீதியைப் போக்க இந்த சமூகம் என்னதான் உறுதி அளித்திருக்கிறது..?’ போன்ற சிந்தனைகள் உள்ளத்தை உறைய வைக்கின்றன! மாறிவரும் கண்ணோட்டத்தால், இனி வரும் காலத்தில் மாற்றுத்திறனாளிகளும் சுதந்திரமாக நடமாட முடியும், அவர்களும் சமூகத்தால் கௌரவமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ‘One Little Finger’ என்ற தலைப்பு கொண்ட ஆங்கில நூலை, அதன் சுவையும் விறுவிறுப்பும் குறையாமல் தமிழாக்கம் செய்திருக்கிறார் ஐஷ்வர்யன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்!

  • ₹100
  • ₹85


Tags: oru, viralil, ulagai, jeyithavar, ஒரு, விரலில், உலகை, ஜெயித்தவர்!, ஐஸ்வர்யன், விகடன், பிரசுரம்