வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த இணைத்தொழில்களை சூழ்நிலைக்கேற்ப தேர்ந்தெடுத்து மேற்கொள்வதே ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகும்.
விவசாயத்தையே முக்கியமான தொழிலாகக் கொண்ட நமது நாட்டில் மொத்த நிலப்பரப்பில் எழுபது சதவிகிதம் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகளும் ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலமுள்ள சிறு விவசாயிகளும், நடுத்தர விவசாயிகளும் ஆண்டு முழுவதும் விவசாயத்தொழிலை மட்டுமே நம்பி இருக்க முடிவதில்லை. இயற்கையின் விளைவுகளாலும் மற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் இவர்களால் விவசாயத்தை எப்போதும் வெற்றிகரமாக செயலாற்ற இயலுவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு லாபத்தை விட நஷ்டம் தான் அதிகமாகிறது. இந்நிலை மாற வேண்டுமானால் வேளாண்மையில் ஒருங்கிணைந்த பண்ணை நிறுவுவது மிகவும் அவசியமாகிறது. வேளாண் இணைத்தொழில் மேற்கொள்வதன் மூலம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து சுய வேலை மேற்கொள்வதன் மூலம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து சுயவேலை வாய்ப்பும், வருமானமும் கிடைப்பதால் விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் உயரும் என்பது திண்ணம்.
ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை - Orunginaitha Velan Pannai
- Brand: வெ. சுந்தரராஜ்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹300
Tags: orunginaitha, velan, pannai, ஒருங்கிணைந்த, வேளாண், பண்ணை, , -, Orunginaitha, Velan, Pannai, வெ. சுந்தரராஜ், சீதை, பதிப்பகம்