படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதையுமே உதாசீனப் படுத்த முடியாது. ஒரு மனிதன் உணர்ச்சியற்றவனாக இருக்கும் பட்சத்தில் அவனிடமுள்ள ஆக்கும் திறமை மறைந்தொழிந்து போய்விடுகிறது. படைப்பாளிக்கு தேவை உயிர்ப்பு (aliveness), சக்தி (energy), பற்றுதல்(passion). உருகியொழுகி ஓடும் - ஒருமுகப்படுத்தப் பட்ட வாழ்வின் மீதான காதலுடன் - பாய்ந்து ஓடும் நதியைப் போல ஆற்றலுடன், ஒடுவது தான் படைப்பு.உங்களின் பார்வை உதாசீனப் படுத்தும் நோக்கிலிருந்தால், அழகு உங்கள் கண்களுக்குத் தெரியாது. உதாசீனப் போக்கு, வாழ்வில் கிடைக்கும் அனைத்தையுமே சாதாரணமாக்கிவிடும். உ-ம் - உங்கள் வேலை; தொழில். இதென்ன பெரிய வேலை என்ற அலட்சியம் உங்கள் நோக்கில் இருக்கும் பொழுது, அந்த வேலை - தொழில் உங்களுக்கு எந்த ஈர்ப்பையும், ஆர்வத்தையும் தராது. வேலை என்ற இடத்தில், வாழ்க்கை என்ற வார்த்தையை இட்டுப் பாருங்கள். இப்பொழுது, புரியும், மனிதர்கள் எதனால், தங்களுக்குள் வாழ்வின் ஆதர்சனமான வெப்பத்தை இழந்து, குளிர்ந்து குறுகிப் போய்விடுகிறார்கள் என்று.
இந்த விபத்து கிழக்கே நிகழ்ந்தது. மதங்கள் ஆசாரம் என்ற பெயரில் தவறான பாதையில், தவறான வழிகாட்டுதலுடன் நடை போட ஆரம்பித்தது. பற்றுதலுடன் வாழ்வை நோக்குவது தவறு என்ற கருத்தில் மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டது (conditioned); பயிற்றுவிக்கப் பட்டது
ஓஷோவின் பார்வையில்... - Oshovin Paarvaiyil
- Brand: ஓஷோ
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹100
-
₹85
Tags: oshovin, paarvaiyil, ஓஷோவின், பார்வையில்..., -, Oshovin, Paarvaiyil, ஓஷோ, கண்ணதாசன், பதிப்பகம்