சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மாதப் பத்திரிகையொன்றை நான் படித்துக்கொண்டிருந்த காலத்து, ஸ்காத்லாந்து தேசத்திற்கு நல் வாழ்வளித்த ராபர்ட் ப்ரூஸ் என்பானைப்பற்றி ஓர் அழகிய கட்டுரையைக் கண்டேன். இளமையில் இவனைப்பற்றிப் படித்திருந்தேனாயினும், இப்பத்திரிகையின்கண் பொலிந்த கட்டுரை என் மனதைக் கவர்ந்தது; கவர்ந்ததுமன்றி, தமிழில் அக்கதைப் போக்கைத் தழுவி மனத்தில் ஒரு நூல் எழுதவேண்டுமென்ற அவாவையும் எழுப்பியது. அதன் முடிவே இச்சிறிய நாடகம். நாடகாசிரியன், தோற்றத்துக்கும் நடிப்புக்கும் இயைந்தவாறு கதையை மாற்றிக் கொள்ளலாம் என்ற உரிமையை இந்நாடக விஷயத்தில் நன்கு அநுபவித்திருக்கிறேன். ஆதலின் இதனை வழி நூலாகக் கொள்க.
இந்நாடகத்தை எழுத ஆரம்பித்த காலத்து இதனை ஒரே தொடக்கத்தில் எழுதி முடிக்கவேண்டுமென்று எண்ணங் கொண்டேன். ஆனால் அவ்வெண்ணத்தை அநுபவத்தில் நிறைவேற்ற முடியவில்லை . 1921-ஆம் வருஷம் ஜூன் மாதம் மூன்றாந் தேதி தொடங்கி இந்நாடகத்தில் நான்கு களங்கள்வரை, தமிழ் நாட்டுக்குத் திலகமாயிலங்கி வரும் 'நவசக்தி' என்னும் வாரப் பத்திரிகையில் ‘நாடகாசிரியன்' என்ற புனைபெயருடன் வெளியிட்டு வந்தேன். பிறகு சில காரணங்களால் முற்றும் வெளி வராமல் நின்றுவிட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து, 1924 - ஆம் வருஷத்தில் - மீண்டும் ‘நவசக்தி'யில் இது முழுதும் வெளியாயிற்று. அதனையே ஒருவாறு சீர்திருத்தி புத்தக வடிவாக இதுகாலை வெளியிட்டிருக்கிறேன்.
பாணபுரத்து வீரன் ஒரு நாடகம் - Paanapurathu Veeran Oru Naadagam
- Brand: வெ. சாமிநாத சர்மா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹30
Tags: paanapurathu, veeran, oru, naadagam, பாணபுரத்து, வீரன், ஒரு, நாடகம், , -, Paanapurathu, Veeran, Oru, Naadagam, வெ. சாமிநாத சர்மா, சீதை, பதிப்பகம்