உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்? முகத்திற்கு நேரே இக்கேள்வியை இந்தக் கதைகளின் வழியாக எழுப்புகிறார் நூலாசிரியர். இன்று உன்னுடைய பாவம், இன்னொரு நாள் வேறொருவருக்கு உரித்தாகுகிறது. முப்பரிமாண காலத்தின் தொட்டிலில் பாவம் பல சமயங்களில் பால் குடித்தபடி படுத்துறங்குகிறது. எதையும் எவரும் தீர்மானிக்க முடியாத இந்தக் காலத்தில் பாவம் என்பதற்கான பல்வேறு வரையறைகளை இந்த எளிய மனிதர்களின் வாழ்வின்வழி வரைந்து காட்டுகிறார் சரவணன் சந்திரன். மேலே சுண்டி விடப்படுகிற நாணயம் பூவாக விழுகிறதா? தலையாக விழுகிறதா? அது காலத்தின் கையிலும் இல்லை. கடவுள் என நம்பப்படுகிற சக்தியின் கையிலும் இல்லை. நாணயத்தின் சுண்டு விளையாட்டில் சிக்கிக் கொண்டிருப்பது காலம் மட்டுமல்ல, மனித வாழ்க்கையும்தான் என்பதை இன்னொரு வடிவத்தில் எழுதிக் காட்டுகிறது இந்நூல்.
பாவத்தின் சம்பளம்-Paavathin Sambalam
- Brand: சரவணன் சந்திரன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹125
Tags: , சரவணன் சந்திரன், பாவத்தின், சம்பளம்-Paavathin, Sambalam